இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் புதிய ஊரடங்கு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது, இதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
போரிஸ் ஜான்சனின் திட்டங்களுக்கு முக்கிய கேபினட் உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சிலர் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், சிலர் கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் கோருகின்றனர். இதையடுத்து மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.