3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொன்ற தாய் கைது.

துபாய் நகரில்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  எகிப்து நாட்டைச் சேர்ந்த 44 வயதுடை கணவரும் 26 வயது மனைவியும் இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.
அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையிலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  பின்னர் கணவர் வேலைக்கு சென்று விட்டார்.
எனினும் கணவர் மீதுள்ள ஆத்திரத்தால் இருந்த பெண் எரிச்சல் பட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தார். சலவை செய்ய வாஷிங் மெஷினில் துணிகளை போட்டுக் கொண்டிருந்தபோது, டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது. இதனால் குழந்தையை அழாமல் இருக்க செய்திருக்கின்டா்
எனினும் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், கூடுதல் எரிச்சல் அடைந்த  தாய் கணவரின் மீதுள்ள ஆத்திரத்தால் கையில் கிடைத்த டி.வி. ரிமோட்டை எடுத்து குழந்தையின் மீது ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.  என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டிலிருந்து தாய் தப்பி சென்றுல்லா்.
இதற்கிடையே அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியும் வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துல்லா்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி சென்ற குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
x