பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல்- 30 பயணிகள் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளானது. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில், 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்ந்தன.

ரெயில் விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்பது கடும் சவாலான நிலையில். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அவ் வழித்தடத்தில் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டது.

கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த நிலையி. 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கலை. அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்கபட்டனா் . இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் இம்ரான் கான், ரெயில்வே மந்திரியை உடனே அந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

x