காற்று வாங்க விமானத்தின் அவசர கதவை திறந்து இறக்கை மீது நடந்த பெண்!

காற்று வாங்குவதற்காக விமானத்தின் அவசர வழி கதவைத் திறந்து இறக்கை மீது வாக்கிங் சென்ற பெண்ணுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு சுற்றுலா சென்று விட்டு உக்ரைன் திரும்பிய விமானம் ஒன்று Kyiv விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது, பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக்கொண்டிருக்க, ஒரு பெண் மட்டும் விமானத்தில் இறக்கை மீது நடந்துகொண்டிருப்பதைக் கண்ட பைலட், என்னவோ ஏதோவென்று எண்ணி பொலிசாரையும் ஆம்புலன்சையும் அழைத்துள்ளார்.

மற்ற பயணிகள் விமானத்திலிருந்து இறங்கும் நேரத்தில், அந்த பெண் மட்டும் அவசர வழியின் கதவைத் திறந்து வெளியேறி, விமானத்தில் இறக்கை மீது சென்று அமர்ந்துகொண்டிருக்கிறார்.

அவரை விமான பணிப்பெண்கள் உள்ளே அழைக்க, ஹாயாக வாக்கிங் செல்வது போல் நடந்து மீண்டும் விமானத்திற்குள் சென்றுள்ளார் அவர்.

பொலிசார் அவர் குடித்திருக்கிறாரா என்று பார்த்தால், அவர் குடிக்கவும் இல்லை. ஏன் விமான இறக்கை மீது நடந்தீர்கள் என்று கேட்டால், விமானத்திற்குள் சூடாக இருந்தது, அதனால்தான் அவசர வழிக்கதவைத் திறந்து வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்.

நல்ல வேளை விமானம் பறக்கும்போது காற்று வரவில்லை என்று கூறி கதவைத் திறக்க முயற்சிக்காமல் இருந்தாரே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தற்போது உக்ரைன் சர்வதேச விமானத்தில் பயணிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண் அவசர வழிக்கதவைத் திறந்துகொண்டு, விமானத்தின் இறக்கை மீது நடப்பதைக் காணலாம்.

x