பிரான்ஸின் வெள்ளப்பெருக்கு காரணமாக 02 பேர் பலி

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 2 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாத்தில் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் 450 மில்லி மீட்டருக்கும் அதிகளவாக மழை பொழிந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அந்த பகுதியில் பெய்த அதிகளவான மழை வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.