அமெரிக்க அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட

கொவிட்-19 தொற்றுறுதியான அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரியத் தலைவர் கிம் ஜொங் அன் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறதியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து, வொஷிங்டனில் உள்ள வோல்டர் றீட் றுயடவநச சுநநன தேசிய இராணுவ வைத்திய மத்தியநிலையத்திற்கு, தனது உத்தியோகபூர்வ உலங்கு வானூர்தி மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வடகொரியத் தலைவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான உலகத் தலைவர் ஒருவர் குணமடைய வேண்டும் என தெரிவித்து வடகொரிய தலைவர் செய்தி அனுப்புவது இதுவே முதல் முறையாகும் என தென்கொரிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி ஆகிய இருவரும் கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், கடந்த தினம் நேரடி விவாதத்தில் ஈடுபட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு துழந டீனைநn கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, ஜோ பைடன் இரண்டு தடவைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிக்சிக்கனில் ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 66 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தனர்.

இதற்கமைய, தமிழகத்தில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்ளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, தமிழகத்தில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறதியானர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்து 516 பேர், கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, தமிழகத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

46 ஆயிரத்து 369 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.