தினமும் 4 மனைவிகளுடன் உல்லாசம், 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி! ; 66 வயது நபரின் வாழ்க்கை லட்சியம் என்ன தெரியுமா..?

16 மனைவிகள் 151 குழந்தைகள் இருக்கும் கொண்ட மனிதர் 17வது திருமணத்திற்கு தயார் என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த இந்த மனிதர் பல ஆச்சரியங்களையும், இன்ப அதிர்ச்சியையும் கொடுக்கிறார். முதல் வியப்பு இவருக்கு 66 வயதாகிறது. இவரது முழுநேர வேலை தன் மனைவிகளை பாலியல் ரீதியாக ‘திருப்திப்படுத்துவது’ என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மிஷெக் நியாண்டோரோ (Misheck Nyandoro) என்ற அந்த (தாத்தா வயதில் இருக்கும்) மணமகன் இந்த குளிர்காலத்தில் 17வதாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவருடைய லட்சியம் என்ன தெரியுமா? தனது வாழ்நாளில் குறைந்தது 100 திருமணங்கள் செய்வது, 1000 குழந்தைகளையும் பெறுவது தானாம்!

அதிசயமும், அதிர்ச்சியும் இன்னும் முடியவில்லை. இந்த 66 வயது முதியவர் தனது தீவிரமான பாலியல் இச்சையைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? தினசரி குறைந்தது தனது நான்கு மனைவிகளை ‘திருப்திப்படுத்தும்’ அளவுக்கு அவரது உடல் ஆரோக்கியம் இருக்கிறதாம்.

இதை படிப்பதற்கு விசித்திரமாகவும், விநோதமாகவும் இருக்கிறதா? இது உண்மையான கதை. பணி ஓய்வுபெற்ற 66 வயது மிஷெக் நியாண்டோரோ என்ற ராணுவ வீரரின் உண்மையான கதை இது. இவர் பலதாரங்களை மணந்திருப்பது பற்றிய தகவல் உலகம் முழுவதிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.

தற்போது தனது மனைவிகளுடன் வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிப்பதைத் தவிர அவர் வேலை எந்த வேலையும் செய்யவில்லை என்று டெய்லி மெயில் (Daily Mail) பத்திரிகையில் அளித்த பேட்டியில் அவர் கூறுகிறார். தனது முழுநேர வேலை ‘தனது மனைவிகளை திருப்திப்படுத்துவது தான் என்று அதிரடியாக கூறுகிறார். தனக்காக, சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, தேவைகளையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் மனைவிகளுக்கு வேறென்ன கைமாறு செய்வது என்று கேட்கிறார் இந்த பொறுப்பான கணவர்.

38 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணத்தை செய்துக் கொண்ட இந்த அபூர்வ மனிதர், தனது ‘பலதார மணம் திட்டம் (polygamy project)’ பற்றி ஜிம்பாப்வே செய்தி நிறுவனமான தி ஹெரால்டிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘1983 இல் ஆரம்பித்த எனது திருமணம், தொடர்ந்து பல பெண்களை மணக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது. நான் இறக்கும் வரையில் திருமணம் செய்துக் கொண்டே இருப்பேன். இடையில் திருமணம் செய்வதை நிறுத்தும் எண்ணம் இல்லை.’

அவர் தனது தீவிரமான பாலியல் அட்டவணையை வெளிப்படுத்தினார், ஒரு இரவுக்கு குறைந்தது நான்கு மனைவிகளை ‘திருப்திப்படுத்தும்’ திறன் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் இந்த 66 வயது மனிதர். தனது இந்த பாலியல் இச்சை, குடும்பத்தை விரிவாக்க உதவுகிறது என்கிறார்.

“எந்த மனைவியின் படுக்கையறைக்குச் செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டுவிடுவேன். ஒரு மனைவியை திருப்திப்படுத்திவிட்டு அடுத்த மனைவியின் அறைக்குச் செல்வேன். இது எனது வேலை. எனக்கு வேறு வேலை இல்லை. ஒவ்வொரு மனைவியின் வயதுக்கு ஏற்ப படுக்கையறையில் எனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வேன். வயதான மனையிடம் நடந்துக் கொள்வதற்கும், இளம் மனைவியை அணுகுவதற்கும் வித்தியாசம் வைத்திருக்கிறேன்” என்று விலாவரியாக தனது மனைவிகளுடனான உறவைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறார் மிஷெக் நியாண்டோரோ (Misheck Nyandoro).

அது மட்டுமல்லாமல், வயதாகும்போது பெண்களின் செக்ஸ் விருப்பம் குறைந்து விடும் என்பதால் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

குடும்பம் பெரிதாக இருந்தபோதிலும், தனது மனைவிகள் அனைவரும் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார். தற்போது இரு மனைவிகள் கர்ப்பமாக உள்ளதாக சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார் மிஷெக் நியாண்டோரோ (Misheck Nyandoro). சரி, குடும்பம் இவ்வளவுப் பெரிதாக இருக்கும்போது, தேவைகளை பூர்த்தி செய்ய பணம் வேண்டுமே! குடும்பத் தலைவரான இவர் பணம் சம்பாதிக்கவில்லை என்றால், குடும்பம் எப்படி நடக்கிறது?

உண்மையில் தனது பெரிய குடும்பத்தை சார்ந்த பலரும் வேலை செய்வதால் பணப் பிரச்சனையே இல்லை என்று அடுத்த அதிர்ச்சியையும் கொடுக்கிறார் மிஷெக் நியாண்டோரோ (Misheck Nyandoro).

“என் பிள்ளைகள் தான் என்னைக் கெடுக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பரிசுகளையும் பணத்தையும் கொடுக்கிறார்கள். என் மனைவிகள் ஒவ்வொருவரும் தினசரி எனக்காக சமைத்து, எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். நான் ருசியான உணவை மட்டுமே சாப்பிடுகிறேன், பிடிக்காத எதையும் நான் சாப்பிட மாட்டேன். மனைவிகளுக்கு என்னைப் பற்றித் தெரியும். அனுப்பிய உணவை திருப்பி அனுப்பினால் கோபப்படமாட்டேன் என்று ஒவ்வொரு மனைவியும் உறுதியளித்துள்ளனர். நான் உணவை சாப்பிடாமல் திருப்பி அனுப்பினால், அது எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்துக் கொண்டு அடுத்த முறை இன்னும் நன்றாக சமைத்து அனுப்புவார்கள்.”

மிஷெக் நியாண்டோரோ (Misheck Nyandoro) போல உலகில் அதிர்ஷ்டசாலி கணவனோ இல்லை அப்பாவோ யாரும் இருக்க முடியுமா? இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

x