ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் பேசுகையில், ஏப்ரல் 19-ம் தேதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள தகுதியானவர்கள் ஆகின்றனர். அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி

மேலும், தனது 100-வது நாள் பதவிக்காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 4ம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கர்களில் 70 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதையும், 16 கோடி அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதையும் நாங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளோம். இதன்மூலம் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

x