“உடனடியாக வெளியேறுங்கள்” அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என அமெரிக்கா இந்தியாவிலுள்ள தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு தினசரி 14 விமானங்களும் ஐரோப்பிய இடங்களுக்கு பல விமானங்களும் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று இந்தியாவில் 3,79,257 கோவிட் தொற்றுகள் மற்றும் 3,645 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போது, ​​இந்தியாவில் மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1.83 கோடியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x