ஒரு ஆணுக்கு 35 காதலிகள் , வருடத்திற்கு 35 முறை பிறந்தநாள் கொண்டாட்டம் : இறுதியில் சிக்கிய இளைஞர்

ஜப்பானில் ஆண்டுக்கு 35 முறை பிறந்தநாள் கொண்டாடி, 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்த காதல் மன்னனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானின் கன்சாய் பிராந்தியத்தை சேர்ந்த 39 வயதான Takashi Miyagawa என்பவரை பொலிசார் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் 35 பெண்களை ஒரே நேரத்தில் ரகசியமாக காதலித்து வந்ததும், அவர்களிடம் இருந்து பிறந்தநாள் பரிசாக சுமார் 950 டொலர் அளவுக்கு பொருட்களை பெற்றுக் கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமது 35 காதலிகளிடமும் வெவ்வேறு திகதிகளில் தமது பிறந்தநாளை குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, தமது காதலிகள் ஒவ்வொருவரிடமும் ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ்வதாகவும், விட்டுப்பிரிவதில்லை எனவும் உறுதி அளித்துள்ளார்.

ஒவ்வொருவரும் திருமணத்திற்கு அவசரம் காட்டும்போது, இன்னொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமது காதலிகளிடம் இருந்து சுமார் 300 டொலர் தொகை அளவுக்கு புதிய உடைகளாகவும் சுமார் 100 டொலர் அளவுக்கு வாழ்த்து அட்டைகளையும் பெற்றுள்ளார்.

குறித்த பெண்கள் அனைவரும் ஒரே ஆணால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை எப்படி உணர்ந்தார்கள் என்பது வெளியிடப்படவில்லை.

ஆனால் பிப்ரவரி மாதம் ஒரே புகைப்படத்தை குறிப்பிட்டு பல பெண்களால் புகாரளிக்கப்பட்ட நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து திட்டமிட்டு ஏமாற்றிய குற்றத்திற்காக பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

x