கல்லூரிக்குள் துப்பாக்கிச் சூடு… அலறியடித்து வெளியேறிய மாணவர்கள்: பிரித்தானியாவில் பட்டப்பகலில் சம்பவம்

பிரித்தானியாவின் சசெக்ஸில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிராலி கல்லூரியின் வெளியே குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் பின்னர் உறுதி செய்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

தகவல் தெரிய வந்த பொலிசார் 3.20 மணியளவில் சம்பவப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இருவர் காயங்களுடன் தப்பியதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

பொலிஸ் தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகும் வரையில், பொதுமக்கள் அப்பகுதியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

x