போலியான செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை

சம காலத்தில் செய்திகளைப் படிப்பதற்காக மக்கள் அச்சு ஊடகத்தினை விடவும் இலத்திரனியல் ஊடகங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

அதிலும் இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது.

இதனைச் சாதகமாப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பரப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் மக்களிடையே அச்ச நிலமை ஏற்படுவதுடன், கலவரங்கள் ஏற்படவும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

எனவே இவ்வாறு போலிச் செய்திகளைப் பரப்பும் இணையத்தளங்களை அந்தந்த நாடுகள் தடை செய்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது மியான்மரும் இணைந்துள்ளது.

அதாவது போலிச் செய்திகளைப் பரப்பும் இணையத்தளங்களை தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் ஊடாக தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு தொலைத் தொடர்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.