பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதன் மூலம்

அணை மற்றும் நீர்மின் நிலையம்

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, வங்காளதேசம் வழியாக பயணிக்கும் பிரம்மபுத்ரா நதி, ஆசியாவின் வற்றாத நதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் அருணாசல பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களின் வளத்துக்கு காரணமான நதிகளில் பிரம்மபுத்ராவுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

சீனா, இந்தியா, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளின் செழிப்புக்கு உத்தரவாதமாக திகழும் இந்த நதியில் அருணாசல பிரதேச எல்லைக்கு அருகே திபெத்தின் ெமடோக் கவுண்டியில் அணை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது. அத்துடன் நீர்மின் நிலையம் ஒன்றை கட்டவும் முடிவு செய்துள்ளது.

சீனாவின் இந்த திட்டத்தை அந்த நாட்டின் மின்சார கட்டுமான கழக தலைவர் யான் சியோங் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டார். சீன நீர்மின் திட்ட துறைக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

சீனாவின் இந்த அறிவிப்பு, பிரம்மபுத்ரா நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் பிற நாடுகளான இந்தியா மற்றும் வங்காளதேசத்துக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக இரு நாடுகளும் தங்கள் எதிர்ப்பையும், கவலையையும் வெளியிட்டன. ஆனால் இதற்கு சீனா அசைந்து கொடுக்கவில்லை. மாறாக தங்கள் நாட்டு நலனுக்காக இந்த திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், பிரம்மபுத்ராவில் அணை கட்டுவதற்கு தங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்டக்குழுவானது, சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதில் பிரம்மபுத்ரா நதியில் கட்டப்படும் அணை உள்பட நாடு முழுவதும் வேகப்படுத்தப்பட வேண்டிய சுமார் 60 வளர்ச்சி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த கூட்டத்தில் அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் மூலம் பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கான அனைத்து தடைகளும் விலகி இருக்கின்றன.

எனவே இந்த அணையின் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என திபெத் தன்னாட்சி பகுதிக்கான கம்யூனிஸ்டு துணைத்தலைவர் சே டல்கா தெரிவித்துள்ளார். இந்த அணைக்கான விரிவான திட்ட வரைவு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு போன்றவற்றுக்கான அனுமதி விரைவில் பெறப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்ராவில் அணை கட்டும் திட்டத்துக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x