தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம்- விஜயகாந்த் அறிவிப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க. வர்த்தகர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வந்த ரவி விடுக்கப்பட்டு வர்த்தகர் அணி துணை செயாளராக சண்முகசுந்தரம் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் பாபு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பேராசிரியர் ஜெகன் பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் சண்முகராஜா வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று டாக்டரின் ஆலோசனையின்படி ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் அவருக்கு பதிலாக மாணவர் அணி செயலாளர் விஜயகுமார் திருவாரூர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர் அணி துணை செயலாளர் செல்வகுமார் விடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்திரமோகன் மாணவர் அணி துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x