Traffic Bot

தினமும் தீவிர பயிற்சி… ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஆண்டு தோறும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்ற போட்டிகள்.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்ப்பவர்கள், காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
காளைகளுக்கு நீச்சல், நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கின்றனர். அதேசமயம், காளைகள் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் வகையில், சரியான நேரத்திற்கு உணவு, தண்ணீர், தீவனம் போன்றவை வைக்கப்பட்டு பராமரித்து, ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தி வருகின்றனர். இதேபோல் மாடுபிடி வீரர்களும் காளைகளை வைத்து பயிற்சி மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக தனது காளைகளை தயார்படுத்தி வரும் ஒரு இளைஞர் கூறுகையில், ‘காளைகளுக்கு தினமும் இரண்டு வேளை பயிற்சி கொடுக்கிறேன். அடுத்த வாரம் போட்டி நடைபெற உள்ளது’ என்றார்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளித்து, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து போட்டிக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
x