7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசய கொடூர சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. போலீசார் தீவிர விசாரண நடத்தி ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த கோர்ட், ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்தது.
மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா சேர்க்கப்பட்டார். திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா ஜூலை 16-ந்தேதி தப்பி ஓடிவிட்டார்.
x