காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் டி.யசோதா. கட்சி மேலிட தலைவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா மறைவுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யசோதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.