சனிப்பெயர்ச்சி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.22 மணிக்கு நடைபெற்றது. அதன்படி சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு கோவிலில் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

x