’ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்கு கூடுவதை பார்த்து வயிறு எரிகிறதோ?’

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசார நிகழ்ச்சியை தற்போதை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அவர் இன்று காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும்போதும் கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜெகஜீவன் அவென்யூவில் ஜீவநாடியான நீர்நிலைகளும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழும் கடற்கரைப் பகுதிகளும் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உரையுடன் எனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டேன்.  #ஆயிரம்_கைகள்_கூடட்டும் #சீரமைப்போம்_தமிழகத்தை
என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில்,
உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம். #இனி_நாம்
என தெரிவித்துள்ளார்.