கட்சி நிர்வாகிகள் தேர்வு- ரஜினிகாந்த் அவசர ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரஜினி தனது புதிய கட்சியை விரைவில் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கும் பணிகள், கட்சியின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் கட்சியை பதிவு செய்வது குறித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் ரஜினி வழங்கி உள்ளார்.