தமிழ் வழி இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக கவர்னர்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான வழக்கில், 20 சதவீத ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் 8 மாதங்களாக இருப்பில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினர்.

இந்த நிலையில் கடந்த 8 மாத காலமாக நிலுவையில் இருந்த 20 சதவீத தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.