தமிழகத்தில் மன்னர்களை ஏன் கொண்டாடுவதில்லை

மன்னர் ராஜராஜ சோழனுக்கு நினைவு சின்னம் அமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிக்கிறது. மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவது போல், தமிழகத்தில் மன்னர்களை ஏன் கொண்டாடுவதில்லை? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

வழக்கு தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.