புரெவி புயல் எதிரொலி – திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3ம் தேதி ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
இது புரெவி புயலாக உருவெடுத்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புரெவி புயல் உருவானதன் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக மிக கனமழை பெய்யும் என்பதால் அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலர்ட் எச்சரிக்கை குறிக்கிறது.
மேலும் டிசம்பர் 2 மற்றும் 4-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.