கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் இன்று 323 பேருக்கு.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 51,18,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,428ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 431 பேர் உயிரிழந்துள்ளனர்.