நிவர் புயல் முழுவதும் கரையை கடந்தது

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிகர் புயல் கரையை கடந்துள்ளது.
100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம்.
என்றார்.