நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்ககும்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன்பின் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுவைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று மாலை நிலவரப்படி 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் புயலின் நகர்வு வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது.
இதனால் கரையை நடக்க காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.