கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.
அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
Related Posts
இந்த தடுப்பூசி தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.