கனமழை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதேவேளை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.