தமிழகத்தின் கனமழை நிலவரம் ஓர் பார்வை

தமிழகத்தில் நாளை பெரும்பாலான மாவட்டங்களில கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் எஸ். பாலசந்திரன் கூறியதாவது:-

கடற்கரையை சுற்றி நிலவும் குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை, மிக கனமழை பெய்யும் என எதிபார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.