தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று தொற்று பாதிப்பு 1,009- ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 990- ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 990- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 03 ஆயிரத்து 613- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து மேலும் 1,153- பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 20 ஆயிரத்து 153- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11,309- ஆக உள்ளது.