சென்னையில் லேசான நிலஅதிர்வு

வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 12.39 மணியளிவில் சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏதாவது சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.