சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்கான நேரம் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகின்றன.

நாளையில் இருந்து மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரெயில்கள் இயக்கப்படும்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரெயில் இயக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.