சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நாளை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை வழங்க இருக்கிறார்.
x