பாஜக பெண் வேட்பாளரிடம் இறுதி வரை போராடி தோற்ற கமல்ஹாசன்! வாடிய முகத்துடன் சோகமாக கிளம்பி சென்ற வீடியோ காட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் இறுதி வரை போராடி தோல்வியை தழுவிய கமல்ஹாசன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சோகமாக வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் கடுமையான போட்டி நிலவியது.

இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்குவித்தியாசமே நிலவிய நிலையில் இறுதியில் வானதி சீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் அருகருகே உட்கார்ந்திருந்தனர்.

இந்த நிலையில் தோல்வி செய்தியை அறிந்தவுடன் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வாடிய முகத்துடன் சோகமாக வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

 

x