வெற்றி பெற்ற பின் ஸ்டாலினை சந்தித்து செங்கலைக் கொடுத்த உதயநிதி! எதற்காக தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், தன் தந்தை ஸ்டாலினை சந்தித்த உதய நிதி ஸ்டாலின் அவருக் செங்கலை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

பிற்பகல் 3.50 மணி நிலவரப்டி திமுக கூட்டணி திமுக 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கிள்ளியூர், விளாத்திகுளம், சேப்பாக்கம், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக கூட்டணி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வால்பாறை, பவானிசாகர் தொகுதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பம் முதலே மிகப்பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

 

இதையடுத்து அவர் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவரும், தந்தையுமான ஸ்டாலினை சந்தித்து AIIMS என்று எழுதிய செங்கலை கொடுத்தார்.

ஏனெனில், பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் தான் நடப்பட்டதாக கூறி பிரச்சாரம் செய்தார்.

அதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அந்த செங்கலை ஞாபப்படுத்தும் விதமாக உதயநிதி, ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

x