13 வது சுற்றின் முடிவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கமல்! நடிகர் பார்த்திபன் போட்ட ஒற்றை டுவிட்

நடிகரான கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அதை கொண்டாடும் விதமாக பார்த்திபன் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சற்று முன் வரை திமுக கூட்டணி 140-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையும், அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.

குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில், நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.

அந்த தொகுதியில் இவர் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனாவான் 24257 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 21504 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் கமல்ஹாசன் 26002 வாக்குகள் பெற்று, 1745 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் முன்னிலையில் உள்ளார்.

13-வது சுற்றின் முடிவில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் சில சுற்றுகளே உள்ளதால், கமல் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இதனால் நடிகர் பார்த்திபன் kaMaL A என்று டுவிட்டை பதிவு செய்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து டிரண்டாக்கி வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன் kaMaL A என்று டுவிட்டில் கமல் MLA என்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

x