நாகர்கோவில், திருநெல்வேலியில் முந்தும் பா.ஜனதா- உதகை, தாராபுரத்தில் கடும் இழுபறி

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது.

மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகிய பா.ஜனதா வேட்பாளர்கள் அதிக வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பா.ஜனதா 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் தற்போதைய நிலவரப்படி பா.ஜனதா நாகர்கோவில், திருநெல்வேலி, உதகமண்டலம், தாராபுரத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி 30,0643 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் 19,580 வாக்குகள் பெற்றுள்ளார்.

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் 32221 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் லட்சுமணன் 22,561 வாக்குகள் பெற்றுள்ளார்.

தாராபுரத்தில் எல் முருகன் 19113 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 17067 வாக்குகள் பெற்றுள்ளார்.

உதக மண்டலத்தில் திமுக, பா.ஜனதா கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.

x