திருவொற்றியூரில் 4வது சுற்று முடிவில் சீமான் பொற்றுள்ள வாக்கு எவ்வளவு.. இன்னும் எத்தனை சுற்றுகள் உள்ளது? முழு விவரம்

நாம் தமிழர் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திருவொற்றியூர் தொகுதியும் ஒன்று.

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சீமான் போட்டியிடுகிறார்.

திருவொற்றியூரில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 10961 ( 40.91 சதவிதம்) வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் குப்பன் 8442 (31.51 சதவித) வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சீமான் 5980 (22.32 சதவித) வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தில் மநீம வேட்பாளர் 665 (2.48 சதவித), 5வது இடத்தில் அமமுக வேட்பாளர் சௌந்தர பாண்டியன் 234 (0.87 சதவித) வாக்குகள் பெற்றுள்ளனர்.

திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் 31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

x