திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார்.

அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மு.க.ஸ்டாலின் 12664 வாக்குகளும், ஆதிராஜாராம் 5012 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

x