தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை! எத்தனை மணிக்கு முடிவு தெரியும்? வெளியான முழு விபரம்

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், எத்தனை மணிக்கு முடிவு தெரியும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6-ஆம் திகதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 2-ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாளை காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின், 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அடுத்த 30 நிமிடங்களில் அதன் முடிவுகளை அந்தந்த மைய அதிகாரி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்.

இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். பெரும்பாலான பகுதிகளில் முதல் 2 மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெளிவாக தெரிய வந்துவிடும்.

.

அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முன்னணி நிலவரத்தை நாளை காலை 11 மணிக்கு அறிந்து கொள்ளலாம்.

இதனால் நாளை பிற்பகலில் தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும். இருப்பினும் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதால் முழு விவரங்கள் திங்கட்கிழமை அதிகாலை தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

x