கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியாகின. பல்வேறு செய்தி சேனல்கள் தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகளை வெளியிட்டன.

இதுகுறித்து சென்னை பட்டினபாக்கத்தில உள்ள அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் இன்று கருத்து கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளாக உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவை தந்துள்ளது.

2011 தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டது. அது பொய்யானது. 124 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியானது. அ.தி.மு.க. 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

அதேபோல 2016 தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
அதிமுக

ஒவ்வொரு தொகுதியிலும் 2, 3, 5 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் சரியாக அமைவதில்லை.

எனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

x