மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 6.30 மணியளவில் குறித்த மாணவி வீட்டிலிருந்து சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவி மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு குறுக்கே அமைந்துள்ள ரயில் பாலத்திருந்து நீர்த்தேக்கத்திற்குள் பாய்வதை பிரதேசவாசிகள் கண்டுள்ளதாக தலவாக்கலை காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.
மேற்படி மாணவி தனது தாயாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இச்செயலை மேற்கொண்டிருக்கலாமென சந்தேகிப்பதாக தலவாக்கலை காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு தலவாக்கலை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.