வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 850 இலங்கையர்கள் நாடு திரும்பினர்…!

கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 850 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அவர்கள் 10 விமான சேவைகளில் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 108 பேரும் சவுதி அரேபியாவில் 102 பேரும் அவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 843 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக அங்கு சென்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

x