Traffic Bot

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான விசேட கலந்துரையாடல்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

x