நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 942 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று 273 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 181 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 2 பகுதியிலே அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த பகுதியில் தொற்றுறுதியான 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோட்டை பகுதியில் 21 பேருக்கும் மட்டக்குளி பகுதியில் 19 பேருக்கும் கொட்டாஞ்சேனை பகுதியில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை கண்டியில் 102 பேருக்கும் மாத்தறையில் 84 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், களுத்துறை 79 பேருக்கும், காலியில் 23 பேருக்கும், இரத்தினப்புரி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 19 பேருக்கும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 15 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இதுதவிர பதுளை மாவட்டத்தில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x