லுணுகலை – ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு!

லுணுகலை – ஹெக்கிரிய பகுதியில் இன்று அதிகாலை சிறியளவான நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் ஒரு புள்ளிக்கும் குறைவான அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

கடந்த 22 ஆம் திகதி வலப்பனை பகுதிக்கு அருகில் 1.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவாகியிருந்தது.

அத்துடன் மடுல்சீமை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹெக்கிரிய பிரதேசத்திலுள்ள சில பகுதிகளிலும் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

x