டெனிசன் குரேயின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை!

சிங்கள சினிமாத் துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரேயின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரடுமுல்ல பகுதியில் உள்ள கிரிஸ்தவ தேவாலயத்தில் மாலை 3.30 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) காலமானார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 ஆகும்.