வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட இடைக்காலக் கணக்கு அறிக்கை

எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையான 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்ளும் ஆயிரத்து 900 பில்லியன் இடைக்கால கணக்கறிக்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இடைக்கால கணக்கு அறிக்கை வாக்கெடுப்பு ஏதுமின்றி இன்று (28) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால கணக்கு அறிக்கைக்காக இருநாள் நாடாளுமன்ற விவாதத்தில் இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதைவிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பிலேயே அதிகமாக கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.