தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம பிரதேசவாசிகளின் கோரிக்கை

பண்டாரகம, அட்டுலுகம , எபிடமுல்லை பிரிவு மற்றும் பமுனுமுல்லை பிரிவின் மக்கள் தாம் முகங்கொடுத்துள்ள இன்னல்கள் தொடர்பில் அலோதியாவ பொலிஸ் காவலரண் அருகில் வந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக நாட்கள் அட்டுலுகம, எபிடமுல்லை பிரிவு மற்றும் பமுனுமுல்லை பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது பொதுமக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

“அரசாங்கத்தின் உணவு பொட்டலம் கிடைக்கின்றது. 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என கூறிய போதும் அதில் 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களே உள்ளன. 14 நாட்கள் சாப்பிட முடியாதுதானே சேர்… அதில் வெங்காயம், மிளகாய் ஒன்று கூட இல்லை. நியாயமான கோரிக்கைதான் சேர் விடுக்கிறோம்” என்றனர்.

x