சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்கள் கைது.

கடந்த வாரம் கிழக்கு, வட மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படை கைது செய்துள்ளது.

அந்த வகையில், திருகோணமலை சுற்று தீவு, பொல்துடுவ கடல் பகுதிகளில் மற்றும் காத்தான்குடி களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 09 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் தலைமன்னார் கலங்கரை விளக்கத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீன்பிடி படகுகளுடன் 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எருக்கலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறி 724 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த கடல் அட்டைகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கடற்படையினர் கைது செய்தனர்.

அதேபோல், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் தலயடி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத நீர்முழ்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 03 நபர்களுடன் ஒரு டிங்கி படகு, 13 கடல் அட்டைகள் மற்றும் நீர்முழ்கி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி சொத்துபிடிய கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இரண்டு படகுகள் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட வலைகள் இழுத்த (Trawling) மூன்று நபர்கள், இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் பிடிக்க்பட்ட 59 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மீன் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 முதல் 52 வயதுக்குட்பட்ட கின்னியா, தலைமன்னார், மன்னார் மற்றும் தலவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும் அவர்களது பொருட்களும் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர்களிடம் மற்றும் பருத்தித்துறை மற்றும் கற்பிட்டி மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.